மருதாணி வைத்து 10 நிமிடத்தில் அழகாக உங்க கை சிவக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

மருதாணிக்கு ஆசைப்படாத பெண்களே கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் மருதாணி ஒன்றை போட்டுக் கொண்டு நன்றாக சிவக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருப்பார்கள்.

மருதாணி வெறும் அழகுக்காக மட்டும் இல்லாமல் இதை கைகளில் வைத்துக் கொள்ளும் பொழுது உடல் சூட்டை தணிக்கும். அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் மருதாணி இலைகள் பயன்படுகின்றன.

 

இந்த மருதாணி வைத்து பத்து நிமிடத்தில் உங்கள் கை சிவக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

செய்முறை 1:

1. முதலில் மருதாணி இலைகளை பறித்துக் கொள்ளுங்கள்.

2. இலைகளை நன்றாக கழுவி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

3. பின் மருதாணியோடு கிராம்பு-2, வெள்ளை சர்க்கரை 1 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு 2 டேபிள் ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் கையில் போடும் அளவிற்கு கெட்டிப் பதத்தில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு முறை‌ முயற்சிபண்ணி பாருங்கள் கட்டுரையும் பத்து நிமிடத்தில் உங்கள் கை சிவக்கும் சந்தேகமே இல்லாமல்.

 

ஒரு சிலர் மருதாணி இலையோடு கொட்டைப் பாக்கை வைத்து அரைப்பார்கள். ஆனால் சிறிது நேரம் தண்ணீரில் கொட்டைப் பாக்கை ஊற வைத்துவிட்டு இலையோடு சேர்த்து அரைத்தால் அந்த இளைஞனிடம் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

 

புளியையும் சேர்த்து அரைத்தால் சீக்கிரம் சிவக்கும். அதேபோல் மருதாணி பெண்களின் கர்பப்பை பிரச்சனைகளை சரிசெய்யும். மாதவிடாயை சுலபமாக இருக்கச் செய்யும். வெள்ளைப்படுதலை சரி செய்யும்.