நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உணவு அவசியமான ஒன்றாக திகழ்கிறது.இதில் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்து தான் நமது ஆற்றல் வேகம் தீமானிக்கப்படுகிறது.காலை உணவில் காய்கறி,கீரை,அரிசி சாதம் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்திருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் இன்று பலர் காலை உணவே சாப்பிடுவதில்லை.நேரமின்மை காரணமாக காலை உணவை பலரும் தவிர்த்து வருகின்றனர்.இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் நாள் முழுவதும் சோர்வாக இருக்கின்றனர்.
காலை நேரத்தில் சிலர் வாழைப்பழத்தை சாப்பிடுகின்றனர்.உணவிற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உட்கொண்டால் மூளை ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
1)அல்சர் பாதிப்பு
2)வயிற்றுப்புண்
3)உடல் சோர்வு
4)மறதி
5)நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:
காலையில் பருப்பு மற்றும் தானியங்களை உட்கொண்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.மூளை ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் உணவுகள் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.காலையில் டீ,காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மாதுளை,ஆப்பிள் போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.காலை நேரத்தில் கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
துரித உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஓட்ஸ் உணவுகள்,வேகவைத்த முட்டையை காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.சிட்ரஸ் பழங்களை காலை நேரத்தில் தவிர்த்துவிடுவது நல்லது.