நிர்வாணத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா… இணையத்தில் வைரலாகும் லைகர் போஸ்டர்!

 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கும் ‘லைகர்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகவுள்ளது.

 

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

 

லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளைப் படக்குழு தற்போது மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி படத்தின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் தேவாரகொண்டா பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் முழு நிர்வாணமாக இருக்கும் அவர், கையில் பூக்களோடு அந்தரங்க பாகங்களை மறைத்தபடி இருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தோடு “இந்த திரைப்படம் என்னிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது. நான் நடித்ததில் சவாலான வேடம். விரைவில் வருகிறோம்” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிர்வாணத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா… இணையத்தில் வைரலாகும் லைகர் போஸ்டர்!

Leave a Comment