நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

0
322
#image_title

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

மனிதர்கள் அனைவருக்கும் மனதில் பல ஆசைகள் இருக்கும்.நல்ல வாழ்க்கை,அதிக சம்பளத்தில் வேலை,பிடித்த வேலை,நல்ல வாழ்க்கை துணை,பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை என்று அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும்.

இந்த ஆசைகள் உங்களுக்கு நியாயமானதா நியாயமற்றதா என்பது நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான் இருக்கிறது.

இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றி வந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்,

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் வசம்பு.வசம்பு பணத்தை ஈர்கக் கூடிய ஒரு பொருள்.அதுமட்டும் இன்றி எதிர்மறை ஆற்றலை உள்வாங்கி கொண்டு நேர்மறை ஆற்றலை கொடுக்க கூடியதாகவும் இருக்கிறது.இந்த வசம்பு தீப பரிகாரத்தை கரி நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்.

ஒரு துண்டு வசம்பை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கப் புங்கன் எண்ணையில் இந்த வசம்பு பொடி சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு கொள்ளவும்.

கரிநாள் அன்று வரக் கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு அரச இலை வைத்து அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கு வைக்கவும்.பிறகு அதில் காய்ச்சிய புங்கன் எண்ணெயை ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றவும்.பிறகு எண்ணிய காரியங்கள்,தொடங்கிய காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து 9 கரிநாள் பிரம்ம முகூர்த்தத்தில் செய்து வந்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

Previous articleMA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!
Next articleவால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!