வீட்டில் பொதுவாக குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள் வாசம் செய்ய வெள்ளிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி ஏற்றப்படும் தீப எண்ணெயில் பச்சைக் கற்பூரத்தை போட்டு வைத்தால் நல்ல ஒரு அதிர்ஷ்டம் வரும். வீடு முழுவதும் கோவிலில் இருக்கின்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். மனதை சுலபமாக ஒருமுகப்படுத்தும். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்க செய்யும் என்பது நம்பிக்கை.
பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும்.
இந்த பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது. இதன் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.நறுமணம் மிகுந்த இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வாள். ஆதலால், பணம் புழங்கும் இடங்களில் வாசனைமிக்க பச்சை கற்பூரம் இருந்தால் செல்வம் செழிக்கும்.
குலதெய்வ அருள் நமது குடும்பத்திற்கு கிடைக்க பச்சை கற்பூரத்தை தீப எண்ணெயில் சிறிதளவு நுணுக்கி சேர்த்தால் எங்கே இருந்தாலும் உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். உங்களுடைய வேண்டுதல்களை கேட்டு கட்டாயம் நிறைவேற்றி தருவார்கள்.
திருப்பதியில் வாசம் செய்யும் ஏழுமலையானுக்கு இருக்கும் அற்புத சக்திகளில், இந்த ஒரு பொருளுக்கும் நிச்சயம் ஒரு பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் கற்பூரத்தை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ‘சுத்தமான பச்சை கற்பூரம்’ தெய்வீக மூலிகை பொருளாகக் கருதப்படுகிறது.
இருப்பினும் இதில் இருக்கும் ரசாயனம் கருங்கல்லை கூட வெடிக்க செய்யும் ஆற்றல் படைத்தது. ஆனால் திருப்பதி ஏழுமலையான் திருவுருவச் சிலையில் வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரத்தை வைத்தாலும் அந்த சிலைக்கு எதுவுமே ஆவதில்லை. நாராயணனுக்கு விருப்பமான பச்சை கற்பூரம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் பணவரவு சரளமாக இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு.
இத்தகைய தெய்வீக அம்சம் பொருந்திய இந்த பச்சை கற்பூரத்தை, சிறிதளவு நுணுக்கி பவுடராக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை நீங்கள் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் நல்லெண்ணெய் உடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் கரைந்து பச்சை கற்பூரம் ஆனது நல்ல ஒரு வாசனையை கொடுக்கும். இந்த எண்ணெய் கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
நாம் நம் வீட்டில் மட்டுமல்லாமல், தொழில் செய்யும் இடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம். இந்த எண்ணெயில் தீபம் ஏற்றும் பொழுது அதனுடைய அதிர்வலைகள் அந்த இடம் முழுவதும் பரவிவிடும். இதனால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் விருத்தி அடையும். பணம் கைகளில் சரளமாகப் புரளும்.