கடன் பிரச்சனை ஒழிந்து செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு எண்ணெயை கொண்டு லட்சுமி குபேரருக்கு தீபம் போடுங்கள்!!

0
175
Light a lamp to Lakshmi Kubera with these two oils to get rid of debt problems and live a prosperous life!!
Light a lamp to Lakshmi Kubera with these two oils to get rid of debt problems and live a prosperous life!!

கடன் பிரச்சனை ஒழிந்து செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு எண்ணெயை கொண்டு லட்சுமி குபேரருக்கு தீபம் போடுங்கள்!!

வாழ்க்கையை நிம்மதியாக வாழ கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.அதற்கு முறையான திட்டமிடல் செய்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேண்டும்.ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை.

ஒரு சிலர் சிறப்பான திட்டமிடலால் கடன் வாங்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்கின்றனர்.ஒரு சிலர் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்துகின்றனர்.இதனால் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு கடனாளியாக இருக்கும் நிலையை நாமே அமைத்துக் கொள்கிறோம்.

வாங்கிய கடனை அடைக்க எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் இருப்பதால் கடன் தொகைக்கான வட்டி ஜெட் வேகத்தில் அதிகரிக்கிறது.இதனால் கடனை அடைக்க முடியாமல் பலர் தவறான வழிகளை தேர்ந்தெடுத்து விடுகின்றனர்.

எனவே கடன் இன்றி நிம்மதியாக வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்து வரவும்.

எந்த நாளில் பரிகாரம் செய்யத் தொடங்குகிறீர்களோ அந்த நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

பின்னர் குபேரர் மற்றும் லட்சுமி தயார் படத்தை அலங்கரித்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு வெற்றிலை எடுத்து சிறிது தேன் தடவிக் கொள்ளவும்.

இந்த வெற்றிலை மீது இரண்டு அகல் விளக்கு வைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.பின்னர் கடுகு எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணையை மிக்ஸ் செய்து இரண்டு அகல் விளக்கிலும் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும்.

பிறகு வாங்கிய கடன் அடைய வேண்டும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று லட்சுமி குபேரரை மனதார வணங்கி வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு வாரத்தில் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி குபேரரை வழிபட்டு வந்தால் கடன் அடைய வழி பிறக்கும்.

Previous articleBP: உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்! 100% பலன் உண்டு!!
Next articleஇந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!