வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம்!! ஏமாற்றத்தில் அரசு பள்ளி மாணவர்கள்!!
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு ஊக்க தொகைகளை தமிழக அரசானது வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்னை பெறுவதற்கு பள்ளி மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர் வங்கி கணக்கை தொடங்கிய மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும். சில மாவட்டங்களில் இதற்கென்று சிறப்பு முகாம்கள் வைப்பதுண்டு.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வங்கி கணக்கு புதிதாக ஆரம்பித்தல் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைத்தல் போன்றவற்றைக்காக சிறப்பு முகாம் ஒன்றை நடத்தினார்.
இந்த சிறப்பு முகாம் ஆனது பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் எண்ணற்ற மாணவர்கள் புதிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்துள்ளனர். இந்த முகாம் மூலம் பல மாணவர்கள் புதிய வங்கி கணக்கை திறந்ததால் அதுவே காலதாமதமாக நேரிட்டது.
எனவே ஆதார் இணைக்க வந்த மாணவர்களின் தேவையை சரிவர பூர்த்தி செய்ய முடியவில்லை.எனவே அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இனி வரும் நாட்களில் இவ்வாறு சிறப்பு முகாம்கள் வைக்கும் பட்சத்தில் புதிய வங்கி கணக்கு ஆரம்பித்தல் மற்றும் ஆதார் எண் இணைத்தல் என தனி தனி பிரிவுகளின் கீழ் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் காலம் விரயம் மற்றும் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். மேற்கொண்டு அனைவரின் தேவையும் பூர்த்தி செய்ய முடியும்.