பனிகாலத்தில் உதடு வெடிப்புக்கு லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை!

Photo of author

By Vijay

பனிகாலத்தில் உதடு வெடிப்புக்கு லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை!

லிப்-பாம் வீட்டிலேயே எளிய முறையில் செய்யும் முறையை பார்ப்போம்.
பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள மிகவும் விரும்புவர். இதற்கென பலவகையான
அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர்.கண்களுக்கு, புருவம், கன்னங்கள், சருமம் என
பலவகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர்.

அந்த வகையில் உதட்டின் அழகை பராமரிக்க, வெடிப்பு வராமல் காக்க என லிப்-பாம் ஐ பயன்படுத்துவர். அதற்காக கடைகளில் பலவிதமான லிப்-பாம் களை வாங்க நிறைய செலவு செய்வர். கெமிக்கல் கலந்த சில உதட்டிற்கு ஒத்து வராமல் பக்க விளைவுகள் ஏற்படுவதும் உண்டு.

எனவே இயற்கையான முறையில் ரசாயனம் கலக்காத பாமை உபயோகப்படுத்துவது நல்லதாகும்.அதிக செலவு செய்யாமல் இயற்கையான முறையில் லிப்-பாம் செய்முறை பற்றிக் காண்போம்.

தேவையான பொருட்கள்:
சிவப்பு ரோஜா இதழ்கள் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 5 ஸ்பூன்
சிறிய பிளாஸ்டிக் பாக்ஸ்

செய்முறை:
1.முதலில் ரோஜா இதழ்களை நீரில் நன்றாக அலசி பின்னர் ஒரு சுத்தமான காட்டன் துணியில்
போட்டு ஈரம் இல்லாமல் ஒற்றி எடுக்கவும்.
2. தண்ணீர் இல்லாமல் ஒற்றி எடுத்தப் பின் இஞ்சி பூண்டு இடிக்கும் சிறிய உரலில் போட்டு
நன்றாக இடித்துக் கொள்ளுங்கள்.பின் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இடித்ததும் ஒரு பவுலில்
மாற்றிக் கொள்ளவும்.
3.பின் இதில் மீதமுள்ள ஆயிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4.பின்னர் டபுள் பாயிலர் முறையில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதன் மேல் ரோஜா
கலவையை வைக்கவும்.நன்கு கொதி வந்ததும் அதை மற்றொரு பவுலில் வடிக்கட்டி சாறை
தனியாக பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும்.
அதனை பிரிட்ஜ் பிரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். ஒருமணி நேரம் கழித்து திறந்து ஒரு கிளறு
கிளறி மீண்டும் மூடி ஒருமணி நேரம் பிரிசரில் வைக்கவும். ஒருமணி நேரம் கழித்து திறந்து
பார்த்தால் லிப்-பாம் தயாராகி இருக்கும்.
இதனை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்து தினமும் தடவி வந்தால் உதடு வெடிக்காமல்
இயற்கையாக நல்ல நிறத்தில் இருக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. காசும் மிச்சம்.