Home Astrology கன்னி ராசி இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

கன்னி ராசி இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

0
கன்னி ராசி இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடியே நடக்கும் நாள். குடும்ப உறவு பக்கபலமாக உள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சில அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் எதிர்பார்த்த முக்கிய முடிவுகளுக்காக காத்திருந்தார்கள் அதற்கு இப்போது வெற்றி வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான தன வரவு ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் அருமையாக நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

author avatar
CineDesk