டாஸ்மாக் நிறுவன உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
சில்லறை கடைகளின் வாயிலாக தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் மதுவை விற்பனை செய்து வருகின்றது. இந்த டாஸ்மாக் கடைகளில் பணிபுரிகின்ற ஊழியர்கள் எழும்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். அதில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து சம்பள உயர்வு கொடுக்க வேண்டும்.
மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் அனுமதியின்றி செயல்படும் தனியார் பார்களை மூடவேண்டும். நிறைய இடங்களில் காவல்துறையினர் மொத்தமாக மது விற்பனை செய்வதாக ஊழியர்களை மிரட்டி வருகின்றனர். எனவே ஒரு தனிநபர் எவ்வளவு மதுபானத்தை வைத்துக்கொள்ளலாம் என்று மதுவிலக்கு துறை தெரிவித்திருக்கிறது.
அதுபோல தாங்களும் தனிநபர்களுக்கு எவ்வளவு மது விற்கலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மதுக்கடைகளில் வசூல் ஆகின்ற பணத்தை கடைக்கு அருகில் இருக்கும் வங்கிகளில் உடனே செலுத்த வழி வகை செய்ய வேண்டும்.” என்ற ரீதியில் நாற்பத்தி ஒரு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேலான் இயக்குனரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்துள்ளனர். ஒருவேளை தனிநபருக்கான மதுபாட்டில்கள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மது பிரியர்களின் பாடு திண்டாட்டம்தான்.