தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

Photo of author

By Savitha

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

Savitha

தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.,
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1555 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது.

சுள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும் ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த 2020ஆம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளசாராயம் கடத்த பயன்டுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1077 மோட்டர் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.