சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!!
இலவசமாக கிடைத்த பீர் பாட்டிலில் கிடந்ததைப் பார்த்து குடிமகன்கள் இருவர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சரக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது.
புதுச்சேரி கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது. இந்த பாரில் மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சலுகையாக இரண்டு பீர் வாங்கினால் ஒன்று என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட பல குடிமகன்களும் நீ, நான் என போட்டி போட்டுக் கொண்டு பீர் வாங்கியுள்ளனர். இதேபோல கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் இருவர் அந்த சலுகை பீர் பற்றி கேள்விப் பட்டு பீர் குடிக்க குறிப்பிட்ட அந்த தனியார் மதுபான பாருக்கு சென்று பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு மேலும் ஒரு பாட்டில் சலுகையாக வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் சந்தோசமாக பணம் கொடுத்து வாங்கிய 2 பீர் பாட்டில்களை முதலில் காலி செய்துள்ளனர். அதன் பின்னர் இலவசமாக வழங்கிய பாட்டிலை குடிப்பதற்கு கையில் எடுத்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த 3-வது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் பேப்பர் மிதந்துள்ளது.
இதன் காரணமாக அதிர்ந்த அவர்கள் சம்பந்தப்பட்ட பார் ஊழியர்களிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முறையான விளக்கம் தராமல் இதை பற்றி வெளியே சொல்லக் கூடாது என கடுமையாக மிரட்டியுள்ளனர். இதனால் இருவரும் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுப்பற்றி புகார் அளித்துள்ளனர்.
பீர் பாட்டிலில் காகிதம் கிடந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.