ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!! தமிழகத்தில் அமோகமான விற்பனை!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 2 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் தேவையான மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் நேற்று டாஸ்மாக் கடைகளின் முன் குவிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது.

இரண்டு நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.248.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அதிகபட்சமான மதுவிற்பனை மண்டலம் வாரியாக…
மதுரை – 56.45 கோடி
திருச்சி – 55.77 கோடி
சேலம் – 54.60 கோடி
கோவை – 49.78 கோடி
சென்னை – 31.50 கோடி

பண்டிகை நாட்கள் இல்லாது சாதாரண நாட்களில் இந்த அளவிற்கு மதுபானங்கள் விற்பனையானது இதுவே அதிகமாகும்.