மதுபான கடைகள் திறக்க தடை! மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு!
திருச்செந்தூரில் வருடம் தோறும் முருகனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கந்த சஷ்டி திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய பகுதியான சூரசம்ஹாரம் மாலை நேரத்தில் நடைபெறும்.இதனை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்தடைவர். அதுமட்டுமின்றி நாளை தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.
இந்த இரண்டு திருவிழாவை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் முருகனின் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை அனைத்து அரசு மதுபானங்களும் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.அறிவிப்பை மீறி யாரேனும் சரக்கை பதுக்கி வைத்து விற்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.