பிப்ரவரி 11-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
இதனால் மதுக்கடைகள் மூடப்படலாம் என அந்த சங்கத்தின் நிர்வாகி கூறியுள்ளார். தலைவர் பெரியசாமி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மாநில பொருளாளர் செயலாளர் துனைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமிசெய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பணியாற்றக்கூடிய தொழிலார்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்ததான ஆலோசனை கூட்டம் நடைப்பெறும்.
இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் இந்த காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்று கூறினார். பிப்ரவரி 10ஆம் தேதி டாஸ்மார்க் தலைமை அலுவலகம் முன்பிருந்த பணியாளர்கள் ஊர்வலம் செல்வார்கள் என கூறினார்.
இந்த போராட்டத்தில் நடைபெறும் நாட்களில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்படும் அபாயம் உள்ளதாகா தெரிகிறது அதே சமயத்தில் மற்ற சங்க பணியாளர்களை வைத்து மதுக்கடைகள் மூடப்படாமல் விற்பனை நடக்கும் என்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.
தினசரி விற்பனையின் மூலம் டாஸ்மாக் நிறுவனம் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுகிறது, வார விடுமுறைகள் மற்றும் தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் இந்த விற்பனை பல மடங்கு உள்ளது.
டாஸ்மாக் அரசு துறையாக இருந்தும், அதன் ஊழியர்களுக்கு இன்று வரை நிரந்தர பணி வழங்கப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலியாக பணியாற்றும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் போன்ற பணியாளர்கள், பணி நிரந்தரமாக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அதிமுக ஆட்சியும் திமுக ஆட்சியும் வழங்கியிருந்தாலும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாதது குறிப்பிடத்தக்கது.