மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வர இருக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்தில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று இரவு டெல்லியில் இருந்த 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் உள்துறை அமைச்சர் இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்றும் அதன் பிறகு அவர் சென்னையில் இருக்கக்கூடிய ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மறுநாள் அதே ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்ற முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் உடைய கட்சி செயல்பாடுகள் அதிமுக உடனான கூட்டணி கருத்துக்களை நிர்வாகிகளிடமிருந்து பெற்று 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்குவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான குருமூர்த்தியை சந்தித்த உள்துறை அமைச்சர் பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் நாளை பிற்பகல் 3 மணி அளவில் சந்திக்க உள்ளதாகவும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் அதிமுக உடனான கூட்டணி பாஜக மாநில தலைவர் நியமனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்பது இனி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழும்பொழுது அதற்கு பாஜகவின் எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் இருக்கிறது. அவரைத் தொடர்ந்து வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் மாஜி பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரின் பெயர்கள் லிஸ்டில் இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் தான் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.