உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!!

0
166
#image_title

உலகத்தின் பல சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல்! 32வது இடத்தை பிடித்த நிதியமைச்சர்!!

உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்களை கொண்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 32வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா நாட்டின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் செல்வம், தாக்கம், செல்வாக்கு, ஊடகம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல் தயார் செய்யப்படுகின்றது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பெயர்களை கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் ஸ்காட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்கள் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த பட்டியலில் 32வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம் பிடித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ந்து 5வது முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இவரை தொடர்ந்து உலகின். மிகவும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஹெச்.சி.எல் டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 62வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70வது இடத்தை பிடித்துள்ளார். பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 76வது இடத்தை பிடித்துள்ளார். ஹெச்.சி.எல் டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா அவர்களை போலவே இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல், பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா இருவரும் கடந்த ஆண்டைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Previous articleBank of Baroda வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleதிறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!