திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!

0
130
#image_title

திறந்து விடப்பட்ட புழல் ஏரி! சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடல்!!

சென்னையில் உள்ள புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், சாலைகள் என பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 11 சுரங்கப் பாதைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையில் உள்ள புழல் ஏரி நிரம்பியதை அடுத்து புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வில்லிவாக்கம், கணேசபுரம், செம்பியம், துரைசாமி, சைதாப்பேட்டை – அரங்கநாதன், ரங்கராஜபுரம், வியாசர்பாடி, திருவெற்றியூர், சி.பி. சாலை, சூளைமேடு லயோலா, மாணிக்கம் நகர், கதிர்வேடு ஆகிய சுரங்கப்பாதைகள் வழியாக போக்குவரத்து இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் சென்னையில் பல பகுதிகளில் தேங்கி இருந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணி முழுவீச்சாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகின்றது. பல இடங்களில் போக்குவரத்து தடையின்றி இயங்கி வருகின்றது.

மேலும் சென்னையில் தாம்பரத்தில் இருந்து அண்ணா சாலை வரையிலும் ஜி.எஸ்.டி சாலையிலும் கிழக்கு கடற்கரை சாலையிலும் இயல்புநிலை திரும்பி போக்குவரத்து தடையின்றி இயங்கி வருகின்றது.