லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்ற திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 7 ஆம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். திமுக தமிழகத்தில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்க போவது யாருக்கு? என்ற மிகப்பெரிய கேள்வி அனைவர் மத்தியிலும் புதிராக உள்ளது. இது தொடர்பாக இன்று கட்சியில் உள்ள எம்.எல்.ஏ. க்களின் ஆதரவு கடித்தை எடுத்துக்கொண்டு ஆளுநரை சந்திக்க செல்லும் திமுக தலைவர் முக ஸ்டாலின், அத்துடடன் புதிய அமைச்சர்களின் பட்டியலையும் கொண்டு செல்ல இருக்கிறார்.
வெள்ளிக்கிழமை அமைச்சர்களாக பதவி ஏற்க போகும் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை ஸ்டாலின் கொண்டு செல்ல உள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அமைத்திருக்கும் இந்த பட்டியலில் சுகாதாரத்துறை உட்பட முக்கியமான சில துறைகள் மட்டுமே உள்ளன. மொத்தமாக அனைத்து துறைகளுக்குமான அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே நாளை பதவி ஏற்க இருக்கிறார்கள். எனவே மிகவும் முக்கியமான சில எம்எல்ஏக்களின் பெயர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சர்கள் பட்டியலை மிகவும் தெளிவான ஆலோசனைக்கு பின்பே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த உடனேயே இந்த அமைச்சர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டதால், தேர்தல் முடிவிற்கு பின் அதில் பெரிய மாற்றங்களை எதுவும் இல்லை என்கிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு முதல் கட்ட அமைச்சரவை லிஸ்டில் வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகத்தில் தான் உள்ளது.
இருப்பினும் நிச்சயமாக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும், இந்தப் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் அடுத்த விரிவாக்கத்தில் அவர்கள் பெயர் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள். இன்று தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது அமைச்சரவை பட்டியலை கொடுத்த பிறகு, அது குறித்து முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சர்கள் பட்டியல் உருவாக்கவிருக்கும் சிறிய அமைச்சரவையில் சில மூத்த எம்எல்ஏக்கள், சில இளம் புது முகங்கள், பெண்கள் என்று கலவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.