லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:!

Photo of author

By Pavithra

லிஸ்ட் ரெடி:! செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு எச்சரிக்கை:!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளா சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு அழகாகப்படும் வன்மம் அதிகளவில் நடந்து வருகிறது.இது போன்ற வன்கொடுமைகள் அதிகளவில் நடப்பதற்கு வலைதளங்களில் வெளியிடப்படும் சிறார்களின் ஆபாச படங்கள் ஒரு விதத்தில் காரணமாக அமைவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஆபாச பட வலைதளங்கள் முடக்கப்பட்டது.எனினும் விபிஎன் ஆப்பை பயன்படுத்தியோ அல்லது வேறு வலைதள ஆப்பை பயன்படுத்தியோ இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.இது மட்டுமின்றி செல்போனில் சிறார்களின் ஆபாச படங்கள் பார்த்தாலோ அல்லது அதனை சமூக வலைதளங்களில் பரப்பினாலோ கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் செல்போனில் அதிக அளவில் சிறார்களின் ஆபாச படங்கள் பார்ப்பதும், அதை சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகியுள்ளது என இன்டர்போல் சிபிஐ-க்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் இந்தியாவில்,தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் அதிரடியாக சோதனையை மேற்கொண்டுள்ளனர்.இதுமட்டுமின்றி சமீபத்தில் ஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட்டை சேகரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.