பெண்களே கேளுங்கள்!! வந்தாச்சு ரூ.18000 சம்பளத்தில் சூப்பர் வேலை! கடைசி தேதி செப்டம்பர் 5!
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வன்முறையால் பாதிக்கபட்ட பெண்களின் நலனைக் கருதி அவர்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.இந்த திட்டத்தில் தொகுப்பூதிய அதாவது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
1.பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளா்
இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.தொழில் நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்கின்ற ஆண்,பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் ரூ.18,000/- ஆகும்.
2.பணி: வழக்கு பணியாளா்கள்
சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில்
அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தது 1 வருடம் முன் அனுபவம் கொண்ட பெண்களாக இருக்க வேண்டும்.உள்ளூரைச் சாா்ந்த வாகனம் ஓட்டத் தெரிந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம் ரூ.15,000/- ஆகும்.
3.பணி: பன்முக உதவியாளா்
ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணி புரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.உள்ளூரைச் சோ்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் ரூ. 6,400/- ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து,பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கேட்கப்பட்டுள்ள உரிய சான்றிதழ்களுடன் வரும் செப்டம்பர் 5 அன்று மாலை 5 மணிக்குள்ளாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: 05-09-2023