பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

0
68

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

மதுரையின் மேற்கில் அமைந்துள்ள இந்த பழனி மலை முருகன் கோவிலானது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இக்கோவிலானது அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.ஆறு படை வீடுகளில் இந்த கோவிலானது மூன்றாவது படை வீடாகும்.

இக்கோவிலின் அடிப்படைவசதிகளைப் பார்க்கும் போது நன்கு சிறப்பாகவே இருக்கிறது.ஏதேனும் அவசரமெனில் அங்கு மருத்துவர்களைக் கொண்ட சிறிய மருத்துவமனை, கோவிலின் முன்,பின் என இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோவிலானது மலைக்குன்றின் மேல் இருப்பதால் பக்தர்கள் செல்வதற்காக.மின்இழுவைவிசை இரயில்,மற்றும் ரோப்கார் போன்ற வசதிகளும் இங்கு உள்ளது.

இக்கோவிலுக்கு வெளியூர் மற்றும் ,வெளிமாநிலத்து மக்கள் என அனைவரும் வருகை தருவார்கள். அதன் பொருட்டு பக்தர்கள் கோவிலின் மூலவர் சிலையைப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டாகச் சென்னை உயர்நீதிமன்றம், அக்கோவில் நிர்வாகத்திற்கு செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்க கோரி அறிவுறுத்தியது.

அதன்படி கோவில் நிர்வாகமும், சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கைப்பேசியைப் பக்தர்கள் மேலே எடுத்துச் செல்லாத வண்ணம் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைப் பற்றி கோவில் நிர்வாகத்திடம் விசாரித்த போது கைபேசியை எடுத்து வரும் பக்தர்களுக்காக,சிறப்பு அமைப்புகள் ,அமைக்கப்பட்டுக் கொண்டுள்ளதாகக் அக்கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பக்தர்களின் கைப்பேசியைப் பாதுகாக்கும் விதமாகக் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பழனிமலை முருகர் கோவிலில் பக்தர்கள், நடைபாதை வழியாகவும் , ரோப்கார்கள் மூலமாகவும் மேலே சென்று வழிபடுவார்கள்.

அவ்வாறே நடைபாதையில் நடக்கும், பக்தர்களின் செல்போன் பாதுகாப்பிற்காக, பழனிபாதவிநாயர்கோவிலிலும்,இரயில்,மற்றும் ரோப் வழியாக வரும் பக்தர்களுக்கு வின்ச், ரோப்கார் போன்ற நிலையங்களிலும், பாதுகாப்பு அறைகளை அமைக்கத் தேர்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டுள்ளன என்றும் அக்கோவில் நிர்வாகிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்

இந்த தேர்வுகள் எல்லாம் முடிந்தபின் சரியான அமைவிடங்களை நிறுவ திட்டமிட்டபட்டுள்ளதாக அக்கோவில் நிர்வாக தலைவர்கள் கூறியுள்ளனர் .

எனவே பழனிமலை முருகன் கோவிலின் பக்தர்கள், இனி செல்போன்களை மேலே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..

author avatar
CineDesk