ஒருநாள் தொடர் – கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு

Photo of author

By Parthipan K

ஒருநாள் தொடர் – கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தநிலையில், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து வங்க தேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிழ் இக்பால் விலகினார். மேலும், நாளை டாக்காவில் நடக்க உள்ள இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.