ஓடிடியில் நேரடி வெளியீடா! விக்ரம், துருவ் நடிக்கும் மகான்

Photo of author

By Parthipan K

சிறந்த நடிகர்களில் ஒருவராகிய விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் .
நடிகையாக சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

மேலும், இசை – சந்தோஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார். சூறையாட்டம் என்கிற படத்தின் முதல் பாடல் திரையில் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் மக்களியிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மகான் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் பரப்பாக தகவல் வெளியாகிய உள்ளது.

இதனையடுத்து இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மக்களியிடையே எதிர்பார்க்கப்படுகிறது.