நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பாக இருக்கும் கல்லீரலில் அழுக்கு மற்றும் கொழுப்பு சேர்வதால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.கல்லீரல் நமது உடலின் ராஜா உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.உடலில் அதிகப்படியான வேலை செய்யும் உறுப்பும் இது தான்.இதன் காரணமாகவே இந்த உறுப்பில் அதிக நச்சுக் கழிவுகள் சேர்ந்துவிடுகிறது.வீட்டிலேயே எளிமையான முறையில் கல்லீரலை சுத்தம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை தூதுவளை இலை – ஒரு கப்
2)வெள்ளை தூதுவளை பூ – இரண்டு தேக்கரண்டி
3)கருஞ்சீரகப் பொடி – 5 கிராம்
செய்முறை விளக்கம்:-
**வெண் தூதுவளை இலையை பயன்படுத்தி கல்லீரல் கழிவுகளை எளிதில் அகற்றலாம்.அதற்கு முதலில் ஒரு கப் வெண் தூதுவளை இலை மற்றும் வெண் தூதுவளை பூ எடுத்துக் கொள்ளுங்கள்.இதை இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
**பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜூஸை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.
**அடுத்து இதில் 5 கிராம் அளவிற்கு கருஞ்சீரகப் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் மற்றும் கொழுப்பு வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)நெல்லிக்காய் – மூன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**,பெரிய நெல்லிக்காய் மூன்று எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
**பிறகு இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி முக்கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து குடித்தால் கல்லீரல் கழிவுகள் வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு கொள்ளு – 50 கிராம்
2)தண்ணீர் – ஒரு கப்
தேவையான பொருட்கள்:-
**50கிராம் அளவிற்கு கருப்பு கொள்ளு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவிடுங்கள்.
**அடுத்து குக்கரில் ஊறவைத்த கருப்பு கொள்ளு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேகவிடுங்கள்.
**விசில் நின்ற பிறகு இந்த கொள்ளு பருப்பை சாப்பிட்டு வேகவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்.இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேறும்.