சேர்ந்து வாழ்வது திருமணம் கிடையாது!! கேரளா அரசின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By CineDesk

சேர்ந்து வாழ்வது திருமணம் கிடையாது!! கேரளா அரசின் அதிரடி உத்தரவு!!

நம் நாட்டில் இப்போது திருமணமாகி வாழ்வதை விட ஒப்பந்தம் அடிப்படையில் அதாவது லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று சொல்லப்படும் உறவு தற்போது டிரெண்டிங் என்று பேசப்படுகிறது.

இதன் வகையில் ஒரு இந்து – கிறிஸ்துவ ஜோடி சென்ற 2016 ம் ஆண்டில் இருந்து கேரளாவில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு அடையாளமாக ஒப்பந்தத்தையும் பதிவு செய்தனர். இவர்கள் இருவருக்கும் பதினாறு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து அருகே உள்ள கோர்ட்டிற்கு சென்று விவாகரத்து கேட்டு உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் இவர்களின் திருமணம் சட்டத்தின் கீழ் நடைபெறவில்லை என்று கூறி இந்த விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து இந்த தம்பதிகள் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகளான முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்ந்தது செல்லாது என்றும், தனிநபர் சட்டம், சிறப்பு திருமண சட்டம் போன்ற மதசார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடைபெற்ற திருமணம் மட்டுமே செல்லும் என்றும் கூறி, இதனால் இவர்கள் விவாகரத்து கோர முடியாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மேலும் இதில் கூறியதாவது, எந்த ஒரு ஒப்பந்த திருமணமும் விவாகரத்து வழங்கும் சட்டத்தின் கீழ் இடம் பெறவில்லை என்றும், இதை விசாரித்த குடும்ப கோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்யாமல் இது விசாரணைக்கு ஏற்றது அல்ல என்று கூறி ரத்து செய்திருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

சம்மந்தப்பட்ட ஜோடி தங்களுக்கான தீர்வை வேறு இடத்தில் தேட முழு சுதந்திரம் இருக்கிறது என்று அறிவித்து இந்த வழக்கை கேரளா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.