வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்!

Photo of author

By Vijay

வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்!

Vijay

Lizard at home!! Simple steps to get rid of it permanently!

வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்!

வீட்டில் பல்லிகள் இருப்பது நமக்கு தொல்லையாக இருப்பதோடு ஆரோக்கிய தொல்லையையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் நாம் சிறிது கவன குறைவாக இருந்தால் போதும் உணவில் கூட விழுந்து நம் உயிருக்கே கூட சில சமயங்களில் உலை வைத்து விடும். போதாக்குறைக்கு அதன் எச்சங்கள் நமக்கு அருவெறுப்பையும் ஏற்படுத்தும்.

இவ்வளவு தொல்லையை தரும் பல்லிகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் விரட்டலாம்.

  • பூண்டு,வெங்காயத்தின் வாசனை பல்லிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே முதல் வழிமுறையில் பூண்டு மற்றும் வெங்காயத்தை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொண்டு அதில் டெட்டால் ஒரு மூடி கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில ஸ்ப்ரே செய்தால் பல்லிகள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும்.
  • நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்தி விரட்டலாம்.
  • வீட்டினை சுத்தமாக வைத்துக்கொண்டால் பூச்சிகள்,மற்றும் பல்லிகள் தொல்லையில் இருந்து காக்கலாம்.
  • வெங்காய சாறு எடுத்து தெளித்தாலும் ஓடி விடும்.
  • காபி பொடியை சிறிது தண்ணீர் விட்டு உருண்டைகளாக பிடித்து பல்லி அதிகம் உள்ள இடங்களில் வைத்தால் பல்லிகள் ஓடி விடும்.