பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!

0
163
#image_title

பல்லி: உங்கள் இல்லத்தில் இந்த இடத்தில் இருந்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும்..!

பல்லி சத்தத்தை வைத்து வாக்கு கேட்க்கும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்கிறது. பேசும் பொழுது, அல்லது ஒரு விஷயத்தை நினைக்கும் பொழுது பல்லி சத்தமிட்டால் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை நாமும் பல முறை முயற்சித்து இருப்போம்.

பல்லி சத்தமிட்டால் மட்டும் தான் அல்ல பல்லி உள்ள இடத்தை வைத்தும் என்ன விதமான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள முடியும்.

எந்த இடத்தில் பல்லி இருப்பதை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்…

வீட்டு பூஜை அறையில் பல்லி இருப்பதை பார்த்தால் நல்லது அதிகம் நடைபெறும். அதிர்ஷ்டம் மழை போல் கொட்டும்.

பூஜை அறைக்குள் ஒரே சமயத்தில் மூன்று பல்லிகள் நடமாட்டத்தை கண்டால் பண வரவு பிச்சிக்கிட்டு கொட்டும்.

வீட்டு நுழைவாயிலில் பல்லி இருப்பதை பார்த்தால் உங்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

அட்சய திரிதியை அன்று வீட்டு பூஜை அறையில் பல்லியை பார்த்தால் தங்கம் குவியும்.

வெளியில் செல்லும் பொழுது வீட்டு சுவற்றில் உள்ள பல்லி உங்களுக்கு வலது பக்கத்தில் இருந்து சத்தமிட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் என்று அர்த்தம்.

பண்டிகை காலத்தில் பூஜை அறையில் பல்லியை பார்த்தால் அந்த வருடம் முழுவதும் பணம் தடை இல்லாமல் வரும் என்று அர்த்தம்.