வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!!

0
43
#image_title

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!!

நம்மில் பலருக்கு பல்லி என்றால் அருவருப்பும்,பயமும் இருக்கும்.இந்த பல்லிகள் வீட்டில் இல்லாத இடமில்லை.அனைத்து இடங்களிலும் பதுங்கி கொண்டு நம்மை பாடாய் படுத்தி வருகிறது.சமையலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருந்தால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் வீடுகளில் பொருட்கள் அதிகம் நகர்த்தப்படாத இடங்களில் தான் பல்லி டேரா போட்டிருக்கும்.இந்த பல்லி தொல்லையில் இருந்து விடுபட ரசாயனம் கலந்த ஸ்ப்ரேயர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை காட்டிலும் வீட்டில் உள்ள வெறும் 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பல்லி தொல்லையில் இருந்து நிரந்தரமாக சுதந்திரம் பெற்று விடலாம்.இந்த முறையினால் நமக்கு எந்தஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.அதே சமயம் செலவும் இல்லை.

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம் – 10

*பெரிய வெங்காயம் – 1

*மிளகு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

2.பிறகு அந்த தண்ணீரை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.அதில் மிளகு மற்றும் இலவங்கம் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

3.அதன் பின்னர் பெரிய வெங்காயம் ஒன்று எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

4.அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைக்க வேண்டும்.

5.பின்னர் அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.ஏற்கனவே ஊற வைத்துள்ள மிளகு,இலவங்கம் தண்ணீரை அதில் கலந்து கொள்ளவும்.முன்னதாக மிளகு மற்றும் இலவங்கத்தை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

6.இந்த தண்ணீரை வீட்டில் பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் கையில் எடுத்து தெளித்து விடலாம்.அல்லது ஒரு ஆயில் ஸ்ப்ரேயரில் ஊற்றி தெளித்து விடலாம்.இந்த வாசனைகள் பல்லிக்கு அறவே பிடிக்காது என்பதினால் அவை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விடும்.