இலங்கைத் தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு அங்குள்ள வங்கிகளில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடனுதவி வழங்கப்பட உள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி பின்வருமாறு :-

நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களில் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு மூலம் கடன் உதவி வழங்க தமிழக தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதற்கான தகுதிகளாக, சரியான முகாம் பதிவு இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், உச்ச வயதுவரம்பு ஏதுமில்லை. மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஒற்றை பெற்றோர் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் மேற்கொள்ளும் திறன்கொண்ட புலம்பெயா்ந்தோருக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பாக பயன்பெற நினைக்கும் பயனாளிகளை தோ்ந்தெடுப்பதற்கான செயல்முறை அனைத்து இலங்கைத் தமிழா்களும், தாங்கள் தொடங்கவுள்ள வணிகம் சாா்ந்த திட்ட அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் இறுதி மானியமாக கடன் தொகையிலிருந்து 30 சதவிகித பணம் நிதி நிறுவனத்தால் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும், திருப்பிச் செலுத்தும் கடன் தொகை அரசு விதிகளின்படி உரிய காலத்துக்குள் மாதாந்திர தவணைகளில் நிதி நிறுவனத்தால் நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் 5 சதவீத வட்டி விகிதத்துடன் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள தனி வட்டாட்சியா், அகதியா் மறுவாழ்வு அலுவலகத்தை, அலுவலக வேலை நாள்களில் (அறை எண்: 302) அணுகி பயனடையும்படி கூறப்பட்டுள்ளது.