மத்திய அரசானது புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் PMEGP என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் தங்களுடைய திட்ட அறிக்கையை சரியாக தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு 35 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சேவை துறையில் ( மெடிக்கல் ஷாப் , சூப்பர் மார்க்கெட் ) தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுவே உற்பத்தி துறையில் தொழில் தொடங்க நினைக்கக்கூடிய இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் 35 சதவிகித மானியம் பெற வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
குறிப்பு :-
புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு தொழிலை தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் அதனை விரிவு படுத்துவதற்காக இத்திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படும் என்றும் தொழிலை விரிவுபடுத்த கடன் பெற நினைப்பவர்கள் அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று PMEGP திட்டத்தினுடைய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.