உள்ளாட்சி தேர்தல் தேதியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்! உற்சாகத்தில் உள்ளுர் பிரமுகர்கள்.

0
164

உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

இதன்மூலம் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை துரிதப்படுத்தி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக உள்ளாட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக அரசு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா என்ற கேள்வி பொதுவாக எழுந்தது, இருந்தாலும் வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுகவின் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு ஏசி சண்முகம் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பிரமாண்ட வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது அக்கட்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது, ஆனால் வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்தது, வெற்றிக்கே திணறியது திமுக. இது திமுகவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது, இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை துரிதப்படுத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுத்து தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்த வந்த தமிழக அரசு தற்போதுதான் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யின் செயல்பாடு பாராட்டு தக்க வகையில் இருப்பதால், இதனை பயன்படுத்தி கொண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது ஆளும் தரப்பு, திமுகவிற்கு மீண்டும் ஒரு கிடைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக அடியெடுத்து வைக்கும் என தெரிகிறது, உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் 4 கட்டமாக தான் நடக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ அரசியல் கட்சிகளின்‌ உள்ளூர் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், சமூகநலவாதிகள், அரசியலில் சாதிக்க விரும்புகிறவர்களின் அனைவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் திருவிழாவை விரைவில் காண தயாராகுவோம்.

Previous articleஇந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம்
Next articleதிமுக சின்னத்தில் வென்ற கூட்டணி கட்சி MP க்களுக்கு சிக்கல்! தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.