மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று இன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னுடைய உரையில் தெரிவித்திருக்கிறார்

கடந்த 2011 முதல் 2016 ஆம் வருடமே உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் காரணமாக, டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கு ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது.

அதேசமயம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதிப்புகள் போன்ற பல விதிமுறைகளில் முறைகேடு நடந்திருப்பதாக திராவிடர் முன்னேற்றக் கழகம் நீதிமன்றம் வரை சென்றது. இதனையே காரணமாக காட்டி அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் கடந்த 2019 ஆம் வருடம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 27 மாவட்டங்களில் நிர்வாகப்பிரிப்பிற்கு உட்பட்டு புதிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவும், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், சம அளவில் வெற்றி பெற்றனர். இதனைதொடர்ந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது.

அதோடு ஊரக உள்ளாட்சி தேர்தலும் கூட நடத்தப்படாமல் இருக்கிறது. ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் பல ஆலோசனைகளை நடத்தியது. இருந்தாலும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி அடைந்ததும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதையே இன்றைய ஆளுநர் உரையிலும் சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சி கொள்கை மீது இந்த அரசு மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் இருக்கின்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த அரசு புத்துயிர் வழங்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஏற்கனவே பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பது என்றால் மறு தேர்தல்? என்ற கேள்வி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இடையையும் எழுந்து இருப்பதாக தெரிகிறது.

அதோடு 2016ஆம் வருடம் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் 9 மாவட்டங்களில் இருக்கின்ற ஊரக அமைப்புகளிலும் அனைத்து நகர்புற ஊராட்சி அமைப்புகளிலும் நடக்கவில்லை. இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட எல்லை வரை அனைத்து வகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பிறகு நோய்த் தொற்றின் தீவிரமான தேர்தலை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருக்கின்றார்.

இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஊரக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோய்த்தாக்கம் முடிவடைந்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்ற உரையாடல் ஆளுங்கட்சி வட்டாரத்தில் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment