உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி – வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

0
90

தமிழ்நாட்டின் பாரம்பரிய வாள்வீச்சு பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி.

இவரது நலனையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவிக்கு அவருக்கு ஆணை வழங்கி, மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை பவானி தேவியின் தாயாரிடம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார்.

பவானி தேவி இப்பொழுது ஜப்பான் நாட்டின் டோக்கியோ என்ற மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் இருந்த ஒலிம்பிக் பரிசுப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு சிகரம்.

இப்போட்டிக்கு இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். சில பயிற்சிகள் பெற தமிழ்நாடு அரசிடம் உதவி கோரியுள்ள நிலையில் இதனை முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து அவரை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பணியையும் அளித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் பவானி தேவியின் தாயார் இடத்தில் வழங்கினார்.

இதற்கு பவானி தேவி அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முக ஸ்டாலின் அவர்கள் ட்விட்டரில் தனது பதிவை பதிவிட்டுள்ளார். இந்தியாவில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள முதல் வீரரான செல்வி பவானிதேவி அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 5 லட்சம் நிதி உதவியை அவரிடம் தாயாரிடம் வழங்கினேன் என்றும், மேலும் பவானிக்கு பதக்கங்கள் குவியட்டும் தமிழரின் திறமை உலகெங்கும் கொடி நாட்டடும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த பவானி தேவி முதலமைச்சரின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். உங்கள் ஆதரவு மற்றும் நோக்கத்திற்கு மிக நன்றி ஐயா, நான் தொடர்ந்து கடினமாக உழைத்து நம் நாட்டை பெருமைப்படுத்துவேன் என்று பதிவிட்டுள்ளார்..