இன்று பதவி ஏற்க இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!

0
111

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் திமுக கிட்டத்தட்ட முழு வெற்றியை கைப்பற்றியிருக்கிறது இந்த தேர்தலில் மொத்தம் இருக்கக்கூடிய 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1420 ஒரு வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் இந்த கிராம பஞ்சாயத்துகளின் 23211 வார்டு உறுப்பினர்கள் என்று ஒட்டுமொத்தமாக 27 ஆயிரத்து 792 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை சென்ற 9ஆம் தேதி நடந்தது இதனையடுத்து வெற்றி அடைந்தவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் இன்று பதவியேற்க இருக்கிறார்கள்.

சென்ற ஐந்து வருட காலமாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில், பதவியேற்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று பதவியேற்றுக் கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர்வரும் 22ஆம் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

எதிர்வரும் 22ம் தேதி ஒன்பது மாவட்ட ஊராட்சித்தலைவர்,துணைத்தலைவர்,9மாவட்டங்களில் இடம்பெற்றிருக்கின்ற ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணை தலைவர்கள்,3002 கிராமப்பஞ்சாயத்துக்களில் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த மறைமுகத்தேர்தலை முன்னிட்டு பிரச்சினைகள் உண்டாகும் என சொல்லப்படும் பகுதிகளில் மறைமுகத்தேர்தலை வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.