தேர்தலில் தோல்வி பெற வைத்த மக்களுக்கு நன்றி… சொல்லி போஸ்டர் ஓட்டிய நபர் !!!

0
159

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கபட்டன . இதில் பெருபாலான கவுன்சிலர் பதவிகளை ஆளும் அ. தி. மு. க மற்றும் தி. மு. க. கணிசமாக பெற்றன மேலும் இந்த தேர்தல் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

மதுரை மாவட்டத்திலுள்ள கேத்துவார்ப்பட்டியில் 2வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட இவர் தேர்தலில் தோல்வியடைந்தர். தோல்வி அடைந்தாலும் அவர் தம் ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரில் கேத்துவார்பட்டி 2வது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட தன்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் மற்றொரு வேடிக்கையான விஷயமாய் நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பாக்கல…என கூறியுள்ளது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleஅடிச்சா திருப்பி அடி அனல் பறக்கும் அதிரடி வசனம்! ட்விட்டரில் கலக்கும் திரௌபதி டிரெய்லர்
Next articleஇந்த விஷயத்தில் அரேபியா தேசத்தை பின்பற்றுமா இந்தியா?