திட்டமிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

0
136

2011 ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இட ஒதுக்கீடு உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் வார்டு மறுவரை குளறுபடி இருப்பதாக கூறி திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வழங்கியது.

2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து கடந்த 9ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மாநில மற்றும் மாவட்ட அரசு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன மேற்படி தேர்தல் வார்டு மறுவரையறை வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவி இடங்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பின் படி நடைபெற உள்ள தேர்தல்கள் அனைத்தும் 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது கிராம ஊராட்சி வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டு மறுவரையறை மற்றும் மேற்கு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசின் அறிக்கைகள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளது.

எனவே சுப்ரீம் கோர்ட் ஆணையின்படி ஏற்கனவே ஒன்பதாம் தேதி நாளை அறிவிப்பு அறிவிப்பில் உள்ள தேர்தல் அட்டவணையின்படி எந்த மாற்றமுமின்றி நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவடையும் என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே திட்ட மிட்ட படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா
Next articleT20 போட்டி – கேப்டன் கோலி செய்த சாதனை என்ன?