இந்த 10 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்

Photo of author

By Parthipan K

கடந்த மார்ச் 23ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்காவது கட்டமாக வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு நிறைவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவுடன் விவாதித்து வருகிறது.

முதல் ஒரு மாதத்தில் குறைந்த அளவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உச்சம் பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியாவின் மெட்ரோ எனப்படும் பெருநகரங்களில் கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. மாநிலங்கள் அளவில் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்நத்த மாநில அரசே ஊரடங்கை தளர்த்தவே நீட்டிக்கவோ மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பூனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிடும் என கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தளர்வுகள் இருக்கும் என தெரிகிறது.