ஜூன் மாத ரேஷன் பொருட்கள் – அரசின் புதிய திட்டம்

0
67

டோக்கன் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் – பொதுமுடக்கம் ஜூன் வரை நீட்டிக்குமா ?

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் எண்ணிக்கை அதிகம் காணப்படும் இடங்களில் ஒன்று ரேஷன் கடைகள். வருமான பற்றாக்குறை காரணமாக இலவச அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்கின்றனர்.

அரசு 1000 ரூபாய் வழங்கிய போதும் மக்கள் தனிமனித இடைவெளியை மறந்து ஒருவருக்கொருவர் முந்தியடித்ததால் கொரானா தொற்று அதிகம் பரவும் அபாயம் உருவானது.

சமீபத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் ரேஷன் பொருட்களை விநியோகிக்க டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. மக்களுக்கு முதலில் ரேஷன் வழங்கும் தேதி , நேரம் என பதிக்கப்பட்டுள்ள டோக்கன் ஒன்று வீடு வீடுகளாக சென்று வழங்கப்படும்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள அந்த நாளிலும் நேரத்திலும் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். டோக்கன் இல்லாதவர்கள் யாரும் பொருட்களை வாங்க முடியாது. இத்திட்டத்தினால் மக்கள் கூட்டம் அதிகம் சேராமலும் அதே நேரத்தில் உணவுப்பொருட்கள் தட்டுபாடின்றி மக்களிடம் சேருமென்றும் அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இத்திட்டத்தினால் பொதுமுடக்கம் ஜூன் வரை நீட்டிக்கப்படுமோ என்று மக்களால் பேசப்படுகிறது. மேலும் இந்த டோக்கன் வழங்கும் திட்டம் முதலில் மதுபாட்டில்கள் வாங்க டாஸ்மாக்கில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K