மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேபாள அரசும் நாடு தழுவிய ஊரடங்கை 10 நாட்கள் மேலும் நீட்டித்துள்ளது.அதாவது கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு வருகின்ற மே 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாகஅறிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அங்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு ஏப்ரல் 27, திங்கட்கிழமையான இன்றுடன் முடிவடையவிருந்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நீட்டிப்புடன், புத்த ஜெயந்தியின் போது ஊரடங்கு அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் 52 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், நாட்டில் இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க குழு முடிவு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது