சென்னையில் தளர்வான முதல் நாளில் மக்கள் கூட்டம்! கடற்கரைகளில் கூடிய சென்னை மக்கள்!

Photo of author

By Parthipan K

சென்னையில் தளர்வான முதல் நாளில் மக்கள் கூட்டம்! கடற்கரைகளில் கூடிய சென்னை மக்கள்!

பொதுமக்களுக்கு 100 நாட்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்ட கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் பூங்காக்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.பல தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் இன்னும் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் திறக்கப்படவில்லை.வேளச்சேரியில் இருக்கும் அரசு நீச்சல் குளமும்,மெரினா நீச்சல் குளமும் மேலும் பல தனியார் நீச்சல் குளங்களும் திறக்கப்பட்டுள்ளன.

திரையரங்கன்களைப் பொறுத்தவரை வரும் வெள்ளிக்கிழமை அன்றே பல்வேறு இடங்களில் திறக்கப்படும் என தெரிகிறது.மேலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் திரையரங்கங்கள் திறக்கப்பட்டதும் ஏற்கனவே வெளியான தனுஷ்,விஜய் படங்களைத் திரையிடப்போவதாக சிட்டி தியேட்டர் உரிமையாளர் கூறினார்.டி நகர்,மதுரவயல்,வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸ் 50 சதவீத பார்வையாளர்களைக் கொண்டு திறக்கப்பட்டது.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் எனவும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.

சென்னையில் கடற்கரைகளில் பார்வையாளர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.அனால் அவர்கள் கடற்கரையின் சுற்றுப்புறங்களில் இருந்து மட்டுமே வந்துள்ளனர்.வாரக் கடைசி நாட்களில் குடும்பத்தோடும் நண்பர்களோடும் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் வருவார்கள்.கொரோனக் கட்டுப்பாட்டு விதிகளை இன்னும் சரிவர மக்கள் கடைபிடிக்கவில்லை என சென்னை மாநகர போலீசார் தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் சரியாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவரை வரை தாங்கள் கடற்கரைகளில் கண்காணிப்பிலேயே இருக்கப்போவதாக அவர்கள் கூறினார்.

மேலும் வணிக வளாகங்கள் மற்றும் அனைத்துக் கடைகளும் இரவு 10 மணி வரை திறக்கப்படலாம் என்ற அறிவிப்பும் சென்னை மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.சென்னை மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிகிறது.மேலும் மாநகர அதிகாரிகளும் காவல்துறையும் முழுவீச்சில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.