வரும் புதன்  கிழமையோடு முடியவுள்ள மக்களவை கூட்டம்!எம்பிகளிடையே அதிகரிக்கும் கொரோனாவால் மத்திய அரசு திட்டம்!

Photo of author

By Parthipan K

மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு சென்ற மூன்று எம்பிக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது.மேலும் கூட்டத்திற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் தான் வந்ததாம். இருந்த போதிலும் கூட கொரோனாவினால் பாதிக்கப்படுவது கவலை அளித்ததால் இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியதிலிருந்தே மக்களவை எம்பிகள் 17 பேர், மாநிலங்களவை எம்பி க்கள் 8 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மக்களவை எம்பிகள் அதிகபட்சமாக பாஜகவை சேர்ந்த 12 எம்பிகள், ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் இருவருக்கும், திமுக, சிவசேனா, ராஷ்டிரிய லோக்தளம் கட்சி எம்பி ஒருவர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பாஜக மாநிலங்களவை எம்பி வினைசஹஸ்ரபுதே கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். கடுமையான சுகாதார கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருக்கும் நிலையிலும் தொடர்ந்து கொரோனா பரவல் எம்பிக்கள் இடையே அதிகரித்துள்ளது.

எனவே மக்களவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்வது தொடர்பாக மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் அவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனால் வரும்  புதன்கிழமையோடு கூட்டத்தொடர் முடிக்கப்படும் என தெரிகிறது.