நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்! முதல் நாளிலேயே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Photo of author

By Sakthi

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மக்களவை ஆரம்பித்தவுடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தொடங்கினார்கள்.

அதோடு எதிர்கட்சியினர் தொடர் முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, மக்களவையில் இன்று பகல் 12 மணி வரை ஒத்தி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.