சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ் கனகராஜ்… திடீர் முடிவு ஏன்?

0
194

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ் கனகராஜ்… திடீர் முடிவு ஏன்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது திரைப்படம் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸட்ர் ஹிட்டானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு படமும் செய்யாத வசூலை விக்ரம் வசூல் செய்தது. இதையடுத்து லோகேஷ் அடுத்து விஜய்யுடன் இணையும் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 170 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியை அவர் இதுவரை ருசித்தது இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டதாகக் கூறியிருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுபற்றி “அடுத்த படத்தின் அப்டேட்டுடன் மீண்டும் வருகிறேன்” என்றும் அறிவித்துள்ளார்.

Previous articleவிஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன?
Next articleஎதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!