விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன?

0
100

விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன?

விஜய்யின் தந்தை S A சந்திரசேகரன் மீதான வழக்கு ஒன்றில் எழும்பூர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனர் மற்றும் நடிகருமான SA சந்திரசேகரன் தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாதது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் சமீபத்தில் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றும் SAC- ஷோபா தம்பதிகள் வழிபட்டனர். அந்த புகைப்படங்களும் வெளியாகி கவனத்தைப் பெற்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லை என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளன. மேலும் SAC-ம் இது சம்மந்தமாக ஊடகங்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் இப்போது வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றம் SAC –ன் அலுவலகத்தை ஜப்தி செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளது.

அவர் இயக்கிய சட்டப்படி குற்றம் எனும் திரைப்படத்தை விளம்பரப்படுத்த ஒரு ஏஜென்ஸி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக அந்த நிறுவனத்துக்கு தரவேண்டிய தொகையில் SAC இன்னும் 76 ஆயிரம் ரூபாய் தரவில்லை என்று கூறி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இது சம்மந்தமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் அந்த தொகையை செலுத்த சொல்லியும் SAC செலுத்தாததால் இப்போது அவரின் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெறும் 76 ஆயிரம் ரூபாயை கட்டமுடியாமல் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் தந்தை அலுவலகம் ஜப்தி செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.