பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறாரா லோகேஷ்? சூப்பர் ஸ்டார் நடிகரோடு கூட்டணி?

0
144

பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறாரா லோகேஷ்? சூப்பர் ஸ்டார் நடிகரோடு கூட்டணி?

லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து அவர் விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்த திரைப்படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்தே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் அடுத்து இயக்கப் போகும் படங்களின் பட்டியல் மிக நீளமாக உள்ளது. கார்த்தியை வைத்து மீண்டும் கைதி 2 திரைப்படத்தை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதுபோல தெலுங்கில் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் விக்ரம் 3 படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

மிக சமீபத்தில் விக்ரம் படத்திற்கு முன்னர் கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது சில காரணங்களால் ரஜினிகாந்த் அந்த படத்தில்  நடிக்க முடியாமல் போனதால் அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கமல் நடித்து விக்ரம் படம் வெளிவந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது மற்றொரு தகவலும் சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. லோகேஷ் விஜய் படத்தை முடித்ததும் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் லோகேஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த கேள்விகள் மேலும் அதிகமாகியுள்ளன.

Previous articleபாக்கெட்டில் அடைக்கப்படாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது! நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை!
Next articleகீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம்