சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

Photo of author

By Gayathri

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், கும்ப ராசியிலிருந்து நேரடி பார்வை 7ம் இடத்திலிருந்த சூரியன் மீது விழுந்தது.
தற்போது சனி பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து, அஷ்டம ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார். இதனால் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யார் என்று பார்ப்போம் –

மேஷம்

வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே இதுநாள் உங்களுக்கு இருந்து வந்த சூரியன் – சனியின் நேரடி தாக்கங்கள் சற்று குறைய உள்ளன. உங்கள் வாழ்க்கையில் தற்போது நல்ல மாற்றம் அடையபோகிறீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உருவாகும். கவலைகள் தீரும். மனைவியுடன் இன்பம் பெருகும்.

ரிஷபம்

வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரமும், கர்ம ஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதாலும், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு இதுநாள் இருந்து வந்த சனி – சூரியனின் நேரடி தாக்கத்திலிருந்து விடுபடுவதால், நீங்கள் நினைக்கும் அனைத்து திட்டங்களும் உங்களுக்கு கைக்கூடி வரும். உடல் நலம் சீராகும். திடீரென்று பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்

வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு பெறுவீர்கள். சம்பளம் உயரும். குடும்பத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

துலாம்

வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவைத் தட்டும். பல துறைகளில் சாதனை படைக்கப்போகிறீர்கள்.