துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

Photo of author

By Gayathri

துலாம் ராசியில் சஞ்சாயம் செய்யும் சூரிய பகவான் – துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்கிறார். மேலும், அக்டோபர் 19ம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் மாற உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் என்று பார்ப்போம் –

மேஷம்

வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் மேஷ ராசிக்கார்களே உங்களுக்கு சில பிரச்சினைகள் நேரிடும். குடும்பத்தில் சண்டை வரும். தொழிலில் பல பிரச்சினைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். கடின உழைப்பு பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்

வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் ரிஷப ராசிக்கார்களே உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வாகனம் ஓட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டும். கவனம் சிதறினால் சில காயங்கள் ஏற்படும். பழைய கடன் கொடுப்பதில் சில பிரச்சினை ஏற்படும். நீதிமன்ற வழக்கு விஷயங்களில் கவனம் வேண்டும்.

கன்னி

வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் கன்னி ராசிக்கார்களே, உங்களுக்கு உடல்சார்ந்த பிரச்சினை  ஏற்படும். எந்த ஒரு செயல்பாடுகளிலும் கவனம் வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. தூசியால் ஒவ்வாமை ஏற்படும். குடும்பத்தில் மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

விருச்சிகம்

வரும் 17ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சாயம் செய்வதால் விருச்சிக ராசிக்கார்களே உங்களுக்கு சில செலவுகள் ஏற்படும். சிலருக்கு காயமும், விபத்தும் ஏற்படும். இதனால் வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் செய்த வேலைக்கு உரிய பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் மனைவியுடன் மனக்கசப்பு ஏற்படும்.