பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!!

0
219
Lorry fell upside down in Perambalur district!! Driver luckily escaped alive.!!
Lorry fell upside down in Perambalur district!! Driver luckily escaped alive.!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் அவ்வப்போது கரும்பு லாரி ஏற்றி செல்வதுண்டு. இவ்வாழையில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு டிரைவராக துறை என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கரும்பு ஆலையிலிருந்து தலைவாசலை நோக்கி கரும்பு லோடு ஏற்றி சென்று வந்தது.இதனை டிரைவர் துறை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரகனூர் நோக்கி இலுப்பநத்தம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் காயம் அடைந்த டிரைவர் துரையைப் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வீரகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிர்ஷ்டவசமாக பாலம் அருகே எந்த வாகனமும் செல்லாததால் பெருமளவு விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சமயம் டிரைவர் துறை என்பவர் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!
Next articleபள்ளி சென்று பெண் ஆசிரியை தாக்கிய மாணவியின் பெற்றோர்கள் !. ஆடைகளைக் கிழித்து கேவலப்படுத்திய உறவினர்கள்?..