உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் எடை அதிகரித்துவிடும்.எனவே உடலில் குவியும் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து குடிங்க.
தீர்வு ஒன்று:
*எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
*இஞ்சி – ஒரு பீஸ்
*தூள் உப்பு – சிட்டிகை அளவு
*பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு
எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எலுமிச்சை சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாறை எலுமிச்சை சாறுடன் மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து சிட்டிகை அளவு தூள் உப்பு மற்றும் பெருங்காயத் தூளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றி பருக வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் கொலஸ்ட்ரால் குறையும்.
தீர்வு இரண்டு:
*வெற்றிலை – ஒன்று
*மிளகு – நான்கு
*இஞ்சி – ஒரு பீஸ்
*தேன் – ஒரு ஸ்பூன்
ஒரு முழு வெற்றிலையை காம்பு நீக்கவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.
பின்னர் அதில் நான்கு மிளகு,ஒரு துண்டு தோல் நீக்கப்பட்ட இஞ்சி ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.
இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி பருகினால் உடல் எடை வேகமாக குறையும்.
தீர்வு மூன்று:
*துளசி – 15 இலைகள்
*இஞ்சி – ஒரு பீஸ்
*மிளகு – இரண்டு
முதலில் துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.பிறகு இஞ்சி பீஸை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து இரண்டு மிளகை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும.இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.